யாழில் சாகித்ய ரத்னா விருது பெற்ற ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார்

Jaffna Sri Lanka
By Siva Thileep May 23, 2022 12:39 PM GMT
Report

இலங்கையில் இலக்கியத்துக்கான அதி உயர்விருதான சாகித்ய ரத்னா விருதை பெற்ற தெணியான் எனும் பெயரில் அறியப்பட்ட கந்தையா நடேசன் நேற்று (22) காலமானார்.

இவர் 1942ல் யாழ் மாவட்டத்தின் வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள பொலிகண்டி, கொற்றாவத்தை கிராமத்தில் பிறந்தவர்.

தொழில் ரீதியில் தமிழ் ஆசிரியராக நீண்டகாலம்பணியாற்றி ,யா/கரவெட்டி ஸ்ரீ நாரதவித்தியாலயம் அரச பாடசாலையாக அங்கீகாரம் பெற்றபோது தலைமை ஆசிரியர் உயர்வுப் பொறுப்புப் பெற்றவர், தொடர்ச்சியில் பகுதித்தலைவர், கனிஸ்ட அதிபர், உப அதிபர், தொலைக் கல்விப்போதனாசிரியர், போன்ற பதவிகளை வகித்து 2002ம்ஆண்டு தேவரையாளி பாடசாலையிலிருந்து ஓய்வு பெற்றவர். முற்போக்கு எழுத்து அணியை சேர்ந்தவர்.

யாழில் சாகித்ய ரத்னா விருது பெற்ற ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் காலமானார் | Veteran Eelam Writer Theniyan Passed Away Jaffna

1964ல்’விவேகி’ சிற்றிதழில் வெளிவந்த ‘பிணைப்பு’என்ற சிறுகதையுடன் இவரது எழுத்துலகப்பிரவேசம் ஆரம்பமானது.

சுமார் 150 சிறுகதைகள் ,10 நாவல்கள்,3. குறுநாவல்கள்,5 வானொலி நாடகங்கள், நூற்றுக்கு மேலான கட்டுரைகள், விமர்சனங்கள், செவ்விகள் என்பன இவரது படைப்பாக்கங்கள்.

இவரது வாழ்நாள் இலக்கியப்பணிக்காக இலங்கைஅரசு ‘சாகித்யரத்னா’(2013) ,வடக்கு மாகாண ‘ஆளுனர் விருது’, (2008), இலங்கை இந்து கலாசார அமைச்சு’ கலாபூஷணம்’(2003) போன்ற விருதுகளை வழங்கி இவரைக் கௌரவித்துள்ளது.

இவரது ‘கழுகுகள்’ நாவல் ‘தகவம், பரிசையும், மரக்கொக்கு’ நாவல் இலங்கைஅரசினதும், வடகிழக்கு மாகாண சபையினதும் சாகித்திய விருதுகளையும் ,’காத்திருப்பு’ நாவல் வடகிழக்கு மாகாண சபையின் பரிசையும், ‘கானலின் மான்’ நாவல் இலங்கைஅரசின் சாகித்திய விருதையும்,’ ‘குடிமைகள் ‘நாவல் இலங்கை அரசின் சாகித்தியவிருதையும், ‘சிதைவுகள்’ குறு நாவல் தேசிய கலை இலக்கியப்பேரவை பரிசையும், சுபமங்களா பரிசையும், சின்னப் பாரதி அறக்கட்டளை விருதையும் , ‘ஒடுக்கப்பட்டவர்கள்’ சிறுகதைத்தொகுதி கொடகே விருதையும் பெற்றுள்ளன. சிறந்த மேடைப்பேச்சாளரான இவர் இள. வயதிலிருந்தே மார்க்சியக் கோட்பாட்டில் ஈடுபாடு கொண்டிருந்தவர்.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் கால உறுப்பினர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தளகர்த்த அங்கம் வகித்த நாளில் சங்கத்தின் யாழ் கிளைச்செயலாளர் பொறுப்பினையும் வகித்தவர்.

சிறுபான்மைத்தமிழர் மகாசபையில் இணைந்து சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்ட ஒரு சமூக விடுதலைப்போராளி. ஏற்றத்தாழ்வற்ற சமத்துவமான சமுதாயமே அவரது இலட்சியமாக இருந்தது. 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US