வெனிசுலா மக்கள் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள போப் லியோ
அமெரிக்க படைகளால் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதூரோ கைது செய்யப்பட்டதற்குப் பிறகு வெனிசுலா மக்களின் தேவைகள் அனைத்திற்கும் மேலாக முன்னுரிமை பெற வேண்டும் என போப் லியோ வலியுறுத்தியுள்ளார்.
இன்றையதினம்(4) பிரார்த்தனைக்குப் பிறகு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வெனிசுலா மக்களின் தேவைகள்
அன்புக்குரிய வெனிசுலா மக்களின் நலன், வேறு எந்தக் கருத்துகளுக்கும் மேலாக முன்னிலை பெற வேண்டும்” என தெரிவித்தார்.

போப் லியோ, வெனிசுலாவின் அதிகாரத் தன்னாட்சியை உறுதி செய்வதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும், “ஒவ்வொரு நபரின் மனித மற்றும் குடிமக்கள் உரிமைகளையும் மதித்து, அமைதியான ஒத்துழைப்பு நிறைந்த எதிர்காலத்தை உருவாக்க நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
நடந்து வரும் நிகழ்வுகளை “ஆழ்ந்த கவலையுடன் நிறைந்த மனதோடு” தாம் கவனித்து வருவதாகவும் போப் லியோ தெரிவித்தார்.