அரசியல் கைதிகளாகக் கருதப்படும் கைதிகளை விடுவிக்கும் வெனிசுலா
மனித உரிமைகள் குழுக்களால் அரசியல் கைதிகளாகக் கருதப்படும் கைதிகளை விடுவிக்க வெனிசுலா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதை அதிகாரிகள் நல்லெண்ண நடவடிக்கையாக விபரித்துள்ளனர்.
இதன்படி, இரட்டை குடியுரிமை பெற்ற ஒருவர் உட்பட அதன் ஐந்து குடிமக்கள் விடுவிக்கப்பட்டதாக ஸ்பெயினின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் முன்னணி மனித உரிமை ஆர்வலர் ரோசியோ சான் மிகுவல் இருப்பதாக கருதப்படுகிறது.
மதுரோவின் கைது
கடந்த சனிக்கிழமையன்று வெனிசுலாவின் தலைநகர் கராகஸில் நடத்தப்பட்ட அமெரிக்க தாக்குதலின் பின்னர் வெனிசுலாவின் ஜனாதிபதி, போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அழைத்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெனிசுலாவில் அரசியல் கைதிகளை விடுவிப்பது என்பது அமெரிக்காவின் நீண்டகால கோரிக்கையாகும், இந்த நிலையில், வெனிசுலாவின் இடைக்கால ஜனாதிபதி, முன்னாள் மதுரோவின் காவலுக்கு பொறுப்பான ஜெனரலை பதவி நீக்கம் செய்துள்ளார்.
வெனிசுலா சிறைகளில் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், இதுவரை ஒரு சிலரே விடுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இதில், பாதுகாப்பு மற்றும் வெனிசுலாவின் இராணுவத்தில் நிபுணரான சான் மிகுவலின் என்ற பெண்ணும் உள்ளடங்குகிறார் அவர், 2024 இல், கராகஸுக்கு அருகிலுள்ள மைக்கேடியா விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மதுரோவை கடுமையாக விமர்சித்த சான் மிகுவல், அப்போதைய ஜனாதிபதியைக் கொல்லும் சதியில் ஈடுபட்டதாகவும், தேசத்துரோகம், சதி மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானார்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri