வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! புதிய வாகனங்களை வாங்க குவியும் இலங்கையர்கள்
நாட்டின் புதிய வாகனங்களை பதிவு செய்யும் நடைமுறையில் ஜனவரி மாதத்தில் வாகனப் பதிவுகள் சாதனை அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த வாகனப் பதிவுகள் குறித்த சமீபத்திய கணக்கெடுப்பில், இரு சக்கர வாகனங்களுக்கான வலுவான தேவை மற்றும் இரண்டாம் நிலை சந்தையில் நிலையான விரிவாக்கம் ஆகியவற்றால் பதிவுகள் அதிகரித்துள்ளன.
வாகன இறக்குமதி அதிகரிப்பு
கடந்த பத்தாண்டின் பின்னர் வாகன பதிவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பு இறக்குமதி அதிகரிப்பிற்கும் பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சந்தையில் 64% பங்கு வகிக்கும் இரு சக்கர வாகனங்களுக்கான தேவை டிசம்பர் மாதத்தில் 48,525 பதிவான நிலையில், ஜனவரி மாதத்தில் மொத்த பதிவுகள் 55,365 உயர்ந்துள்ளன.
இதற்கமைய, மோட்டார் கார் பதிவுகள் 5,007 இலிருந்து 4,648 குறைந்துள்ளதுடன், புதிய கார்கள் 1,150 இலிருந்து 556 யூனிட்டுகளாக குறைந்துள்ளன.
ஆதிக்கம் செலுத்திய வாகனங்கள்
அதே நேரத்தில் கட்டுமானத்துடன் தொடர்புடைய வாகனங்களின் பதிவுகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.டிசம்பர் மாதத்தில் 48,525 யூனிட்டுகளிலிருந்து ஜனவரியில் மொத்த பதிவுகள் 55,365 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளன.

அதே நேரத்தில் பயன்படுத்தப்பட்ட கார் பதிவுகள் 4,092 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளன, இதில் சுசுகி ,வேகன் ஆர் மற்றும் டொயோட்டா யாரிஸ் போன்ற ஜப்பானிய மாடல்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
இதேவேளை, வாகன இறக்குமதியும் டிசம்பரில் US $ 311 மில்லியனாக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam