ருஹுனுகுமாரியை மிஞ்சும் அதிகாரிகளின் வாகன பேரணி! - ஆளும் கட்சி உறுப்பினர் குற்றச்சாட்டு
ஜனாதிபதியின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் வாகன பேரணி ருஹுனுகுமாரியை விட நீளமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்படும் நிதி விரயத்தை அப்பாவி இராணுவ வீரர்களின் குடும்ப நலனுக்காக வழங்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“ஜனாதிபதி மூன்று வாகனங்களை மாத்திரமே பயன்படுத்துவதாகவும் அதனை பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவசர முடிவுகளால் விவசாயத்தில் அதிக விளைச்சர் பெறும் வாய்ப்பு இல்லாமல் போனதுடன் சுற்றுலாத்துறையும் இன்று ஸ்தம்பித்துள்ளது.
வீண் செலவுகளை குறைக்கும் தொலைநோக்குப் பார்வையை நாடு கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளமை, நிரலாக்க குறைபாடு இருப்பதையே சுட்டிக்காட்டுவதாக அவர் கூறினார்.
எமது பிரதேசங்களில் தேயிலை மற்றும் இலவங்கப்பட்டைக்கு உரம் இன்றி மக்கள் தவித்து வருவதாகவும் இன்று ஒரு மூட்டை யூரியா 10,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.



