எதிர்வரும் நாட்களில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: வர்த்தகர்கள்
தம்புள்ளை உட்பட நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கும் காய்கறிகளின் தொகை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரசாயன பசளைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடே இதற்கான பிரதான காரணம் என தெரியவருகிறது.
அதேவேளை பேலியகொடை மெனிங் காய்கறி சந்தைக்கு கிடைக்கும் காய்கறிகளின் தொகையானது 60 வீதமாக குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.
சந்தைக்கு கிடைக்கும் காய்கறிகளின் தொகையானது எதிர்வரும் நாட்களில் குறைந்தால், தட்டுப்பாடு ஏற்பட்டு, காய்கறிகளை கொள்வனவு செய்யவும் மக்கள் வரிசைகளில் நிற்கும் நிலைமை ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்தைக்கு கிடைக்கும் காய்கறிகளின் தொகை குறைந்துள்ளதால், அவற்றின் மொத்த விற்பனை விலைகளும் அதிகரித்துள்ளதாக மெனிங் சந்தை பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபசேன தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan