கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு இல்லை- வவுனியா வர்த்தகர் சங்கம் தீர்மானம்
இலங்கை தமிழரசுக் கட்சியால் எதிர்வரும் திங்கள் கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கதவடைப்புக்குஆதரவு வழங்க முடியாது என வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
வட- கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னம் மற்றும் முல்லைத்தீவு முத்தையன் கட்டில் இடம்பெற்ற சம்பவங்களிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் திங்கட்கிழமை ஹர்த்தால் ஒன்றை மேற்கொள்வதற்கு இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பிரித்தானியாவில் உள்ளவர்களால் இலங்கையில் இயக்கப்படும் ஆயுதக் குழுக்கள்! அவிழ்க்கப்படும் மர்ம முடிச்சுக்கள்
ஆதரவு இல்லை
குறித்த கதவடைப்புக்கு வவுனியா மாவட்ட வர்த்தகர் சங்கம் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என வர்த்தகர் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் தமிழரசுக் கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் இரு தினங்களுக்கு முன்பாக நேரடியாக சந்தித்து ஆதரவை கோரியிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக ஆராய்வதற்க்காக வவுனியா வர்த்தகர் சங்கத்தின் நிர்வாகசபை கூடியது.
இதன்போது அநேகமான நிர்வாகசபை உறுப்பினர்கள் அன்றையதினம் வியாபார நிலையங்களை திறக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
இதனையடுத்து எதிர்வரும் திங்கள்கிழமை வியாபார செயற்பாடுகள் வழமை போன்று நடைபெறும் என்றும் வவுனியா வர்த்தகர் சங்கம் கதவடைப்புக்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக அதன் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri