வவுனியா பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி பிரச்சினை: நீதிபதி நேரில் சென்று கள ஆய்வு(Video)

Vavuniya M A Sumanthiran
By Thileepan Jul 07, 2023 07:17 PM GMT
Report

வவுனியா பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி தொடர்பிலான பிரச்சினைக்கு தீர்வு பெற்றுகொடுக்கும் நோக்கில், வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி குறித்த பிரதேசத்திற்கு கள ஆய்வு ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

வவுனியா பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதியை தமது பாவனைக்கு வழங்க வேண்டும் என கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் குறித்த வீதியை நேற்று (07.07.2023) வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.


வவுனியா பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி ஓமந்தை புகையிரத நிலையம் அமைப்பதற்காக 2012 ஆம் ஆண்டளவில் நிரந்தரமாக மூடப்பட்டு மக்கள் பாவனைக்காக பல கிலோ மீற்றர் சென்று கிராமத்திற்கு வரும் வகையில் பிறிதொரு பாதை வழங்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் தமது பழைய பாதையை மீள வழங்க வேண்டும் என கோரி கிராம மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.

வழக்கு விசாரணை

வவுனியா பெரிய விளாத்திக்குளம் பிரதான வீதி பிரச்சினை: நீதிபதி நேரில் சென்று கள ஆய்வு(Video) | Vavuniya Sumanthiran Visit Vilathikulam Road

இந்த விடயம் தொடர்பில் 2018 ஆம் ஆண்டு ஓமந்தை பொலிஸார் ஊடாக கிராம மக்கள் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த வழக்கு விசாரணையின் போது நீதிவான் நீதிபதி நேற்றைய தினம் குறித்த இடத்தை பார்வையிட வருவதாக தெரிவித்திருந்தார்.

இதன் பிரகாரம் ஓமந்தை புகையிரத நிலையப் பகுதிக்கு வருகை தந்த நீதிபதி மூடப்பட்ட பாதை மற்றும் தற்போதைய பாதைகளை பார்வையிட்டதுடன் புகையிரத திணைக்கள பொறியியலாளர் மற்றும் கிராம மக்கள் சார்பிலான சட்டத்தரணி ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ. சுமந்திரன், கிராம மக்களுடன் கலந்துரையாடிய நீதிபதி மக்களின் இலகுவான பயணத்திற்கு ஏதுவான எடுக்க கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் புகையிரத திணைக்களத்தினர்டம் கேட்டறிந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், புகையிரத திணைக்களத்தின் பொறியியலாளர் கிராம மக்கள் கோரிய இடத்தில் முச்சக்கரவண்டிகளுக்குட்பட்ட வாகனங்கள் செல்லக்கூடிய விதத்தில் பாதை அமைத்து தருவதாக தெரிவித்ததுடன் பார ஊர்திகள் தற்போது பயன்படுத்தப்படும் பாதையினூடாகவே பயணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை கிராம மக்கள் ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து இரண்டு வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதியினால் புகையிரத திணைக்களத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பிலான அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் 21 திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US