தடகள போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மாணவர்கள் சாதனை
வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலை மகள் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை படைத்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தடகள போட்டியானது இம்மாதம் 6,7,8,9,10 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.
இப்போட்டியில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்களும் பங்குபற்றி வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

18வயதின் கீழ் இடம்பெற்ற ஆண்களுக்கான தட்டு எறிதல் போட்டியில் k.சுபிஸ்கரன் 3ஆம் இடத்தையும், 14வயதின் கீழ் பெண்கள் பிரிவினரின் 100m ஓட்ட போட்டியில் R. டர்சியா 3ஆம் இடத்தையும் 18தின் கீழ் பெண்கள் பிரிவினரின் 800m ஓட்ட போட்டியில் S. லிதுசா 4ஆம் இடத்தை பெற்றிருந்தனர்.
அத்துடன் 20 வயது ஆண்கள் பிரிவில் அ.கோகுலன் தட்டு எறிதலில் 6ஆம் இடமும், பெண்கள் பிரிவில் R.பிரேமிகா உயரம் பாய்தலில் 5ஆம் இடத்தையும் 16வயது ஆண்கள் பிரிவில் Y. சாருஜன் 6ஆம் இடத்தையும் பெற்று பாடசாலைக்கும், வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri