வவுனியாவில் மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் : பெற்றோர்களுக்குப் ஒரு வார கால அவகாசம்

Sri Lanka Police Vavuniya Nothern Province Parenting School Children
By Thileepan Jul 16, 2026 10:28 AM GMT
Report

பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிச் செல்லும் பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்குக் கட்டாயமாகத் தலைக்கவசம் அணிவிக்க வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை நடைமுறைப்படுத்துவதற்காகப் பெற்றோர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விழிப்புணர்வு நடவடிக்கை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று(15.07.2026) நடைபெற்ற விசேட விழிப்புணர்வு நடவடிக்கை ஒன்றில் கலந்துகொண்ட வவுனியா போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் : பெற்றோர்களுக்குப் ஒரு வார கால அவகாசம் | Vavuniya Police Give Helmet Deadline For Students

அத்துடன், தகுந்த தலைக்கவசம் இன்றித் தங்களது பிள்ளைகளைப் பாடசாலைக்கு மோட்டார் சைக்கிள்களில் ஏற்றி வந்த பெற்றோர்கள் மறிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆபத்துகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர்களுக்கான தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களும் பொலிஸாரால் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஒரு வார கால அவகாசம்

இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி மலீத் ரணதுங்க,

இன்றிலிருந்து ஒரு வார காலத்திற்குள் மோட்டார் சைக்கிள்களில் அழைத்து வரப்படும் அனைத்துச் சிறுவர்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் பிரத்யேகத் தலைக்கவசம் அணிவிக்கப்பட வேண்டும்.

வவுனியாவில் மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் : பெற்றோர்களுக்குப் ஒரு வார கால அவகாசம் | Vavuniya Police Give Helmet Deadline For Students

இந்த ஒரு வார கால அவகாசம் நிறைவடைந்த பின்னர், விதியை மீறும் பெற்றோர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இலங்கையில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகளவில் பதிவாகின்றன. இதில் தலைக்கவசம் அணியாமல் பயணிக்கும் சிறுவர்கள் பாரிய தலைக்காயங்களுக்கு உள்ளாகி, உயிரிழக்கும் அல்லது நிரந்தரப் பாதிப்புக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கண்காணிப்பு நடவடிக்கைகள்

இதன் காரணமாகவே வவுனியா போக்குவரத்து பொலிஸார் இந்த விசேட அதிரடிப் பரிசோதனையையும் விழிப்புணர்வையும் ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலை ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் இந்த விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடரும். இலங்கையின் மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின்படி, மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் ஓட்டுநர் மட்டுமன்றி, பின்னால் பயணிக்கும் நபரும் (அவர் சிறுவராக இருந்தாலும்) தரச்சான்றிதழ் பெற்ற தலைக்கவசத்தை அணிவது கட்டாயமாகும்.

வவுனியாவில் மாணவர்களுக்கும் தலைக்கவசம் அவசியம் : பெற்றோர்களுக்குப் ஒரு வார கால அவகாசம் | Vavuniya Police Give Helmet Deadline For Students

அத்துடன் இலங்கையில் பதிவாகும் மொத்த வீதி விபத்துக்களில் 40 வீதத்துக்கும் அதிகமானவை மோட்டார் சைக்கிள் விபத்துக்களாகவே உள்ளன.

காலை வேளையில் பாடசாலைக்கு அவசரமாகப் பிள்ளைகளை அழைத்து வரும்போது, பெற்றோர்கள் கவனக் குறைவாக முந்திச் செல்ல முற்படுவதால் பாடசாலை வலயங்களுக்கு அருகிலேயே அதிக விபத்துகள் ஏற்படுவதாகப் புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன என தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGallery

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US