தமிழர் பகுதியில் விளக்கேற்றினால் கைது செய்யப்படுவீர்கள்: எச்சரிக்கை விடுத்த பொலிஸார்
வவுனியாவில் நெடுங்கேணி பகுதியில் சிவராத்திரி தினமன்று இரவு நேரத்தில் மின் விளக்குகளை ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என அப்பகுதி பொலிஸார் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (07.03.2024) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வவுனியா நெடுங்கேணி பகுதியில் உள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி நிகழ்வுகளும் வழிபாடுகளும் விமர்சையாக இடம்பெற்று வருகிறது.
அப்பகுதியில் தொல்பொருள் திணைக்களம் பல ஆண்டுகளாக குறித்த வழிபாட்டு நிகழ்வுகளை குழப்பும் விதமாக செயற்பட்டு வருகின்றது.
இதேவேளை, நாளை நடைபெறவுள்ள சிவராத்திரி நிகழ்வுகளை குழப்பும் விதமாக நெடுங்கேணி பொலிஸார் செயற்பட்டு வருகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri