பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள வவுனியா மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள்
வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் தாதியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தாதியர்கள் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு ஆதரவாக வவுனியா வைத்தியசாலையிலும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தற்போது 3000 ரூபாவாக உள்ள விசேட கடமைக் கொடுப்பனவை 10,000 ரூபாவாக உயர்த்துதல், தொழில் வல்லுனர் பட்டதாரிகளுக்கு திருத்தியமைத்த சம்பள அளவுத்திட்டத்தை நிர்ணயத்துடன் தகுந்த பதவி வாய்ப்புக்களைக் கிடைக்கச் செய்தல், ஆசிரியர் சேவை சம்பள உயர்வின் மூலம் தாதிய சேவைக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டை தீர்த்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகைளை முன் வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வவுனியா மாவட்ட பொது
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவை, நோயாளர் விடுதிகள்,
குருதி பரிசோதனை என்பனவற்றின் சேவைகளை பெற்றுக் கொள்வதில் நோயாளர்கள் பல்வேறு
சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.










தமிழ்த் தலைவர்கள் ஒருபோதும் முடிவடையாத பேச்சுவார்த்தையின் எஜமானர்கள் 16 மணி நேரம் முன்

அடிக்கடி வரும் உடல்நலப் பிரச்சனை, டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ Cineulagam

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் Cineulagam

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
