வவுனியா மாமடு பகுதியில் காட்டுத்தீப்பரவல் - தீயணைப்பு பிரிவினர் நடவடிக்கை
வவுனியா மாமடு பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் நேற்று (18.09.) மாலை ஏற்பட்ட தீப்பரவல் பலமணிநேர போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மாமடு சூரிய மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகேயுள்ள காட்டுப்பகுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீ கட்டுப்பாட்டுக்குள்

அதனையடுத்து சூரிய மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியமையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த குழுவினர் பல மணிநேர போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது காற்றின் காரணமாக
ஏற்பட்டுள்ளதா போன்ற பல்வேறு கோணத்தில் மாமடு பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்









மரண வீட்டில் அரசியல்.. 1 மணி நேரம் முன்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அறிவுக்கரசிக்கு நடந்த தரமான சம்பவங்கள்... வைரலாகும் போட்டோ Cineulagam
சவுதி அரேபியாவை அடுத்து... பல மில்லியன் டன் தங்க இருப்பைக் கண்டுபிடித்த மத்திய கிழக்கு நாடு News Lankasri