வவுனியாவில் முதியவர் கொலை: உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்
வவுனியா மாவட்டத்தின் கூமாங்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு வாடகை தொடர்பான தகராறே இந்த கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
பொலிஸார் விசாரணை
கூமாங்குளம் பகுதியில் வசித்து வந்த 72 வயதுடைய நபர் ஒருவர், தனது வீட்டின் மலசலகூடத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதப்பட்டதையடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து முதியவரின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குறித்த பரிசோதனையின் முடிவில், இது இயற்கையான மரணமல்ல ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது உறுதி செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், வீட்டு வாடகை தொடர்பான பிரச்சினை காரணமாகவே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri