வவுனியா விபத்தில் இருவர் படுகாயம்!பொலிஸார் விசாரணை
வவுனியா - பூந்தோட்டம் பிரதான வீதியில் இன்று (20) மாலை இடம்பெற்ற விபத்தில் கணவன், மனைவி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தமது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன்,மனைவியை வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.
பொலிஸார் விசாரணை
இதன்போது விபத்தில் காயமடைந்த இருவரும் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தை ஏற்படுத்திய இளைஞர் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
எனினும் குறித்த பகுதியில் ஒன்றுக்கூடிய இளைஞர்கள் அந்த நபரை நையபுடைத்ததுடன், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை வவுனியா, செட்டிகுளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்றைய தினம் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 20 மணி நேரம் முன்

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
