இரு துண்டுகளாக பிளவடைந்த வட்டுவாகல் பாலம்: பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
பரந்தன் - புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி இரண்டாக பிளவுபட்டிருப்பதால் தடைப்பட்டுள்ள போக்குவரத்தினை சீர்செய்யும் பணி இடம்பெற்று வருகின்றது.
அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் பரந்தன் புதுக்குடியிருப்பு ஊடான முல்லைத்தீவு A35 வீதி வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்து நீர் பாய்கின்றது.
இதனால் குறித்த வீதியுடனான போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
மாற்று வழியினை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்
எனவே தேவையின் நிமித்தம் முல்லைத்தீவிற்கு பயணம் செய்வோர் புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வழியான மாற்று வழியினை பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வட்டுவாகல் பாலமூடான போக்குவரத்து பெரும்பாலும் இன்று (03.12.2025) மாலை முதல் வழமைக்கு திரும்புவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீதி சீர் செய்யப்பட்டு போக்குவரத்து மேற்கொள்ளக்கூடிய நிலையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri