தான் இறந்துவிட்டதாக வெளியான செய்தி குறித்து கருத்து வெளியிட்ட அரசியல்வாதி
தான் இறந்துவிட்டதாக ஒரு பொய்யான சமூக ஊடகப் பதிவு பரவி வருவதாகவும், இது குறித்து விசாரித்து பலர் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாகவும் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
"அவர்கள் எனது பிறப்பு ஆண்டு மற்றும் தற்போதைய ஆண்டையும் கூட அதில் சேர்த்திருந்தனர்.
அரசியல்வாதிகளின் மரணம்
முதலில் நான் சிரித்தேன்," நான் அதை ஆராய்ந்தபோது, அந்தப் பதிவுக்கு மேலே 'தேசிய மக்கள் சக்தி' என்ற பெயரைக் கண்டேன்.
இது மக்கள் விடுதலை முன்னணி அல்லது தேசிய மக்கள் சக்தியையோ எதிர்ப்பவர்கள் யாரோ ஒருவரால் உருவாக்கப்பட்டது என்று நம்பும்படி உள்ளதென அவர் விளக்கினார்.
தேர்தலில் போட்டியிடும் திறன் தனக்கு இப்போது இல்லை என்றாலும், அரசியலில் இருந்து விலகும் நோக்கம் இல்லை என்றும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் மரணம் வரை ஓய்வு பெறுவதில்லை.
வலதுசாரி குழுக்களின் தாக்குதல்களை முறியடித்து, இடதுசாரி அரசியல் இலட்சியங்களை முன்னேற்றி, எனது கட்சியை பலப்படுத்தி, இந்த நாட்டில் ஒரு ஐக்கியப்பட்ட இடதுசாரி இயக்கத்தை கட்டியெழுப்ப உதவுவதே எனது இலக்கு," என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
