நானுஓயாவில் விபத்து! ஒருவர் படுகாயம்
நானுஓயா- பங்கலாவத்த பகுதியில் வான் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்து இன்று (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நுவரெலியாவிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த வானும் எதிர் எதிரே நானுஓயா பங்கலாவத்த பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதனையடுத்து ,வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam