ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்தமைக்கான காரணத்தை வெளியிட்ட முன்னாள் நிதியமைச்சர்
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணை தாமதம் காரணமாகவே ரூபாவின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவயிலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்கள்
சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐஆகு) கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தங்களின்படி, நாட்டிற்குச் சேர வேண்டிய நிதித் தவணைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே ரூபாயின் மதிப்பு கட்டுக்கடங்காமல் சரிந்து வருகின்றது.

நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களின் நிபந்தனைகள் மீறப்பட்டதன் காரணமாக, கடன் தவணை தாமதமாகியுள்ளது. அதன் மூலம் நாட்டிற்குச் வந்து சேர வேண்டிய சுமார் 700 மில்லியன் டொலர்கள் இதுவரை கிடைக்கவில்லை.ரூபாயின் கடுமையான மதிப்பு வீழ்ச்சிக்கு இதுவே முக்கிய காரணமாகும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியின் காரணமாக ரூபாய் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இந்த நிலையைத் தணிப்பதற்கு இலங்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சும் உடனடியாகத் தலையிட வேண்டும்.
குறிப்பாக வெளிநாட்டுக் கையிருப்பு மேலாண்மை மற்றும் கொள்கை முடிவுகள் தொடர்பாக, மத்திய வங்கியும் நிதி அமைச்சரும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பந்துல குணவர்தன மேலும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam
3 மற்றும் 5 வயது குழந்தையை காட்டில் கைவிட்ட பிரான்ஸ் பெற்றோர்: போர்ச்சுகல் பொலிஸார் அதிரடி News Lankasri
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan