இத்தாலி - இலங்கை இடையிலான ஓட்டுநர் உரிம அங்கீகாரம் - விண்ணப்ப நடைமுறை அறிவிப்பு
இலங்கை மற்றும் இத்தாலி அரசாங்கங்களுக்கு இடையே கடந்த டிசம்பர் 12ஆம் திகதியன்று கையெழுத்திடப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இருதரப்பு ஒப்பந்தத்தின் கீழ், உரிமங்களை மாற்றிக்கொள்வதற்கான நடைமுறைகளை இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு ஏப்ரல் 10ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வருகிறது.
ஓட்டுநர் உரிமை
ஓட்டுநர் உரிமங்களை மாற்றுவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் வசதிக்காக தூதரகத்தில் தினமும் ஒரு சிறப்பு கவுண்டர் திறக்கப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்க்பபட்டுள்ளது.
இலங்கைத் தூதரகம்
இந்தச் சேவைக்காக வியாழக்கிழமைகளில் தூதரகத்திற்கு வரும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வசிக்கும் இலங்கை மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களது இலங்கை ஓட்டுநர் உரிமங்களை இத்தாலிய ஓட்டுநர் உரிமங்களாக மாற்றிக்கொள்ள முடியும் என இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
எதிர்நீச்சல் பார்வதி நடித்து வந்த சூப்பர்ஹிட் தொடர் முடிவுக்கு வந்தது... கடைசி நாள் வீடியோ இதோ Cineulagam
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri