ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நியமனம்
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதையடுத்து வெற்றிடமாக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தனவை நியமித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) வது பிரிவு மற்றும் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு அமைவாக தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்றார் ரணில்
இலங்கையின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவாவிற்கு இந்த வார தொடக்கத்தில் நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க எழுத்து மூலம் அறிவித்தார்.
ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை (ஜூலை 21) நாடாளுமன்ற வளாகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் ஜனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அன்றைய தினம், ரணில் விக்ரமசிங்க, அரச தலைவராக கடமைகளை பொறுப்பேற்றுள்ள நிலையில், பதவி விலகல் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக எழுத்து மூலம் செயலாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
