பிரான்ஸில் அறிமுகமாகவுள்ள தடுப்பூசி கடவுச்சீட்டு! பெரும்பான்மை மக்கள் ஆதரவு
பிரான்ஸில தடுப்பூசி போட்டவர்களுக்கு விசேட கடவுச்சீட்டு வழங்கும் நடைமுறை குறித்து பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த கடவுச்சீட்டு மூலம் விமானப் பயணம் அல்லது பிற சேவைகளை இலகுவாகப் பெற முடியும். எனினும் இந்த யோசனையை அரசாங்கம் குறைத்து மதிப்பிட்டுள்ள போதிலும் அதனை நிகராகரிக்கவில்லை என பிரான்ஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய கருத்துக் கணிப்பில், ஐந்தில் மூன்று பகுதியினரான, 62 வீதமானோர் இந்த யோசனைக்கு ஆதரவு வெளியிட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்ள விரும்பும் மக்கள் தடுப்பூசி கடவுச்சீட்டுகளை கட்டாயமாக்குவதற்கான யோசனையை ஆதரித்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கருத்து குறித்து தாம் முன்கூட்டியே விவாதிக்க ஆரம்பித்து விட்டோம் எனவும், இது மிகவும் வரைவான தீர்மானமாகும் என ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர் க்ளெமென்ட் பியூன் தெரிவித்துள்ளார்.
“இது மிகவும் முன்கூட்டிய விவாதமாகும். மற்றவர்களை விட சிலருக்கு மாத்திரம் அதிக உரிமைகளை வழங்கும் கடவுச்சீட்டு இருப்பது அதிர்ச்சியாக இருக்கும். இது தடுப்பூசியின் அவசியத்தை வழங்கும் விழிப்புணர்வாக இருக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பல்வேறு அரசியல் தரப்பினர்களும் முன்னாள் அமைச்சர்களும் இந்த திட்டத்தை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்.
நாட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்றால் இந்த கடவுச்சீட்டு கட்டாயமாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தடுப்பூசி கடவுச்சீட்டை விடுதிகள் மற்றும் உணவகங்கள் அல்லது பல்கலைக்கழக விரிவுரைகள் போன்ற பல்வேறு வகையான சேவைகளை அணுக பயன்படுத்தலாம் என முன்னாள் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த கடவுச்சீட்டு கட்டயமாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் அரசாங்கம் இந்த திட்டத்தை நிராகரிக்காமல் தொடர்ந்து ஆராயந்து வருவதனால் வெகு விரைவில் இந்த கடவுச்சீட்டு அமுலுக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri