திருகோணமலை தமிழர்களுக்கும் தொழில் வாய்ப்புக்கள் வேண்டும் : மனோ வலியுறுத்து
திருகோணமலை - புல்மோட்டை (Trincomalee - Pulmottai) கனிம மணல் கூட்டுத்தாபன தொழிற்சாலையின் தொழில் வாய்ப்புகள் திருகோணமலைத் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (01.04.2024) கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரணவிடம் (Ramesh Pathirana) தனிப்பட்ட ரீதியில் இந்த வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார்.
புல்மோட்டை கனிம மணல் கூட்டுத்தாபன தொழில்வாய்ப்புகள் தென்னிலங்கை வாசிகளுக்கு தொடச்சியாக வழங்க படுவதாக திருகோணமலை தமிழர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.
மேலதிக விபரங்கள்
இதனையடுத்தே, நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவை நாடாளுமன்றத்தில் இடைமறித்து இது தொடர்பில் தெரிவித்துள்ளார்..
இதன்போது, மனோகணேசன் கூறிய விடயங்களை கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண அமைதியாக செவிமடுத்துள்ளதுடன் மேலதிக விபரங்களை பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறித்த விபரங்களை வழங்குவதாக மனோகணேசன் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |