படுகொலைச் செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி. தர்மலிங்கத்தின் 41ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவருமான விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் 41ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வுகள் இன்று(02.09.2026) யாழ்ப்பாணம் தாவடியில் இடம்பெற்றுள்ளது.
நினைவு தினம் அனுஷ்டிப்பு
கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதி தாவடி பகுதியில் அடையாளம் தெரியாதவர்களால் வி. தர்மலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றுள்ளன.

இதன்போது, அவரின் மகனான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் அவரது பாரியார் இணைந்து நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களும் மலரஞ்சலி செலுத்தியுள்ளனர்.





காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 11 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam