நடுக்கடலில் அமெரிக்கா நடத்திய அதிர்வு சோதனை! வெளியானது காணொளி
333 மீட்டர் நீளமுள்ள உலகின் மிகப்பெரிய, புதிய USS Gerald R Ford போர்க்கப்பல் இல 78, முழுமையான அதிர்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட காணொளி காட்சிகளை அமெரிக்க கடற்படை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் கிழக்கு கடலில் இந்த கப்பலுக்கு மிக அருகில் சுமார் 20 டன் வெடி மருந்துகள் வெடிக்க வைக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அதிர்வுகளை கப்பல் தாங்கியதா என சோதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அப்போது வெடி மருந்துகளின் தாக்கத்தால் பாரிய அளவிலான கடல் நீர் மேலெழும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க்காலங்களில் அல்லது சவாலான காலங்களில் புதிய போர்க் கப்பல்களால் தாக்குபிடிக்க முடியுமா என்பதை சோதிக்கும் முகமாகவே இந்த அதிர்வு சோதனை நடத்தப்பட்டதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.
இதனிடையே புளோரிடாவுக்கு கிழக்கே 161 கிலோ மீட்டர் தொலைவில் 3.9 ரிக்டர் அளவையில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்காவின் ஜியாலஜிகல் சர்வே துறை தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் விளைவாக குறித்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கலாம் என சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.