எனது நிலைப்பாட்டில் பயனில்லை! - சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே
எனது நிலைப்பாட்டில் பயனில்லை தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் தீர்மானங்களை எடுப்பார்கள் என ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நாட்டின் கோவிட் நிலைமைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
கோவிட்டை கட்டுப்படுத்தக் கூடிய ஒரே வழிமுறை நோய்த் தொற்று பரவுகையை தவிர்ப்பதேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
“இந்த மாதம் மிகவும் ஆபத்தானது, வீடுகளிலேயே முடிந்தளவு இருங்கள்.” எனது நிலைப்பாட்டில் பயனில்லை, தீர்மானம் எடுக்க வேண்டியவர்கள் தீர்மானங்களை எடுப்பார்கள்.
அரசாங்கம் செய்யும் சுகாதார அமைச்சு செய்யும் என பார்த்துக்கொண்டிருக்க வேண்டாம் என மக்களிடம் கோருகின்றேன். உயிரின் முக்கியத்துவம் உங்களுடையது. உங்களது குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளவும்.
எனவே முடக்க நிலை அறிவிக்கப்படும் வரையில் காத்திருக்க வேண்டாம். அவரவர் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சியுங்கள். சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுங்கள். தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
தேவையற்ற விருந்துபசாரங்கள், விருந்தினர்கள் வீடுகளுக்கு செல்வதனை தவிர்க்கவும். தங்களை பாதுகாத்துக்கொள்ள தாங்கள் முயற்சிக்க வேண்டும்” என ராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
