உச்சக்கட்டத்தை எட்டியுள்ள ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: தயார் நிலையில் படைகள் - ஈரானின் உச்ச தலைவர் கடும் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு ஈரானிய கடற்படை "புதிய கசப்பான தோல்விகளை" பரிசளிக்கும் என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிய அரசு தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட அவரது செய்தியில், ஈரானின் இறையாண்மையைப் பாதுகாக்க அந்நாட்டுப் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
கடந்த சில மணி நேரங்களில் அந்த வழியாகச் சென்ற குறைந்தது இரண்டு வணிகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சதித்திட்டங்கள் முறியடிக்கப்படும்
ஈரானின் கடல் எல்லைக்குள் அத்துமீறும் எந்தவொரு சக்திக்கும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சதித்திட்டங்கள் முறியடிக்கப்படும் என்றும் கமேனி குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே ஈரான் - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைக்கான அடிப்படை கட்டமைப்பு குறித்த இழுபறி நீடித்து வரும் சூழலில், உச்ச தலைவரின் இந்த ஆவேசமான பேச்சு போரை நோக்கிய நகர்வாகவே பார்க்கப்படுகிறது.
சர்வதேச அளவில் மசகு எண்ணெய் விநியோகம் செய்யப்படும் இந்த வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக உலக நாடுகள் மிகுந்த கவலையடைந்துள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்த எச்சரிக்கைக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகின்றன என்பதைப் பொறுத்தே இப்பிராந்தியத்தின் அடுத்தகட்ட நகர்வு அமையும்.
புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
மயிலுக்கு ஆதரவாக நிற்கும் குடும்பம், ஆனால் சரவணன் செய்த ஷாக்கிங் விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam