மன்னார் கடற்கரையில் அமெரிக்காவின் தொடா்பாடல் சாதனம் கண்டுபிடிப்பு
மன்னார் இராணுவ முகாமுக்கு அருகிலுள்ள கடற்கரையில் பகுதியில் இருந்து நேற்று மாலை தகவல் தொடர்பு சாதனங்கள் அடங்கிய பெட்டியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத தொடர்பாடல் பெட்டி ஒன்றை கண்ட பிரதேச மீனவர் ஒருவர் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையின் (STF) வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் பிரிவின் அதிகாரிகள் பெட்டியை ஆய்வு செய்ததில், அச்சமூட்டும் வகையில் ஒன்றும் உள்ளே இல்லை என்பது தொியவந்தது.
எனினும் வானிலை மற்றும் வானிலை மாற்றங்களைக் கண்காணிக்க இந்த தொடா்பாடல் பெட்டி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தநிலையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த சாதனத்தை கப்பல்கள் மூலம் எவராவது கடலில் வீசியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.




