இலங்கையின் மின்வலு ஆற்றலை மேம்படுத்த அமெரிக்கா நிதியுதவி
இலங்கையின் மின்வலுத் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு அமெரிக்கா பத்தொன்பது மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
குறித்த நிதியுதவியைக் கொண்டு புத்தாக்க மற்றும் மீள்பயன்பாட்டு சக்தி வளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
புத்தாக்க மற்றும் மீள்பயன்பாட்டு சக்தி வளங்கள் அபிவிருத்தி
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ஆகியோருக்கு இடையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
Had an encouraging discussion this morning with Madam Ambasodor @USAmbSL. Shared our plans for the transformation of the Power n Energy sectors and the immediate proposed solutions in place for the power n energy crisis. Hope to work closely with the US to transform the 2 sectors pic.twitter.com/1VZT9pYdVQ
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 26, 2022
இலங்கையின் மின்வலு மற்றும் ஆற்றல்வலுத் தேவை நிரந்தரமானதும் செயற்திறன்மிக்கதுமான முறையில் மேம்படுத்தப்படுவதற்காக இந்த நிதியுதவி வழங்கப்படுவதாக அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
A steady transition to renewable energy will help put SL on the path toward economic recovery. Minister of Power & Energy @kanchana_wij and I sat down to discuss how @USAIDSriLanka’s $19 million grant will help SL’s power sector become more reliable, sustainable, and efficient. pic.twitter.com/ZitGkfUyQs
— Ambassador Julie Chung (@USAmbSL) May 26, 2022