பற்றியெரியும் ஈரானிய ட்ரோன் கப்பல்: அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு
30க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைவர் அட்மிரல் பிராட் கூப்பர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 72 மணிநேரத்தில் ஈரானில் கிட்டத்தட்ட 200 இலக்குகளை அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் தாக்கியுள்ளன.
கப்பல்கள் மூழ்கடிப்பு
இதுவரை 30க்கும் மேற்பட்ட ஈரானிய கப்பல்களை அமெரிக்கா மூழ்கடித்துள்ளது.

கடந்த சில மணிநேரங்களில் மட்டும், இரண்டாம் உலகப் போரின் விமானம் தாங்கி கப்பலின் அளவுள்ள ஈரானிய ட்ரோன் தாங்கி கப்பலை நாங்கள் தாக்கியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதில் தீப்பிடித்து எரியும் ஈரானிய ட்ரோன் கப்பல் அடங்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.