மலையக தமிழ் சமூகம் எதிர்நோக்கும் நெருக்கடி! அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை
மலையக தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு இலக்காவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பெருந்தொட்ட பகுதிகளில் வாழும் பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு இலக்காகின்றனர் என அமெரிக்க மனித உரிமை அறிக்கை ஒன்றில் மூலம் அம்பலமாகியுள்ளது.
மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழ்ப் பெண்கள் இவ்வாறு குடும்ப கட்டுப்பாட்டுக்கு இலக்காகின்றனர் என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் பலவந்தமான அடிப்படையில் கருக்கலைப்புகள் அல்லது குடும்ப கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனினும் தன்னார்வ அடிப்படையில் குடும்ப கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாக இலங்கையின் சிவில் அமைப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் நிலைமை குறித்த அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையில் இலங்கையின் சிவில் அமைப்புகளை மேற்கோள்காட்டி மலையக பெருந்தொட்டப் பகுதிகளில் வறுமையில் வாடும் சமூகத்தினர் குறிப்பாக பெருந்தோட்டங்களைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்க மருத்துவமனைகளில் அரச மருத்துவர்கள் பிரசவத்தின் போதான சிசேரியன் சிகிச்சைகளில் கணவரின் ஒப்புதலை மட்டும் பெற்றுக் கொண்டு குடும்ப கட்டுப்பாடு மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் அந்த பெண்களின் ஒப்புதல் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் திட்டமிட்ட அடிப்படையில் மலையக தமிழ்ப் பெண்கள் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகின்றனரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படவில்லை.
எனினும், குடும்ப வறுமை நிலைமையின் நிர்ப்பந்தம் காரணமாக சுயவிருப்பின் அடிப்படையில் பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் பெரும்பாலும் பெண்களின் ஒப்புதல் கேட்கப்படுவதில்லை எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 8 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

பிரித்தானியாவில் திரும்ப பெறப்படும் 72,000 கார்கள்: எந்தெந்த கார் மாடல்கள் இடம்பெறுகிறது தெரியுமா? News Lankasri

நேற்று முதல் மனைவியுடன் நிகழ்ச்சி, இன்று மாதம்பட்டி ரங்கராஜ் 2வது மனைவி செய்த வேலையை பாருங்களே... Cineulagam
