மிக சக்திவாய்ந்த ஆயுதங்களுடன் தயார்நிலையில் அமெரிக்க போர்க்கப்பல்கள்! எச்சரிக்கும் ட்ரம்ப்
"ஒன்று ஒப்பந்தம், இல்லையேல் தாக்குதல்" என ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே, ஈரானைத் துவம்சம் செய்ய அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயத்தமாகிவிட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நியூயோர்க் பத்திரிக்கை ஒன்றுக்கு ட்ரம்ப் அளித்த நேர்காணலில், "எமது போர்க்கப்பல்களில் இதுவரை தயாரிக்கப்பட்டதிலேயே மிகச்சிறந்த மற்றும் நவீன ஆயுதங்களை ஏற்றி வருகிறோம்.
24 மணிநேரங்கள்..
முன்னதாக நாங்கள் நடத்திய தாக்குதல்களை விட இது மிகவும் வீரியமானதாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரான் தரப்பில் லெபனான் போர் நிறுத்தம் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க நிபந்தனை விதிக்கப்பட்டாலும், ட்ரம்ப் அதைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
"ஈரானிடம் தற்போது எந்த துருப்புச் சீட்டும் இல்லை; அவர்கள் உலக நாடுகளை அச்சுறுத்தி மட்டுமே பிழைக்கப் பார்க்கிறார்கள்" என ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் சாடியுள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக மிகக் குறைந்த அளவு கப்பல்களே அனுமதிக்கப்படுவது குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள அவர், இது ஒப்பந்த மீறல் எனக் கூறியுள்ளார்.
கடும் எச்சரிக்கை
மறுபுறம், அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் சென்றுள்ளார். "பேச்சுவார்த்தை சாதகமாக அமையும் என நம்புகிறோம், ஆனால் ஈரான் எம்முடன் விளையாட நினைத்தால் தகுந்த பதிலடி நிச்சயம்," என அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையில், இஸ்லாமாபாத்தின் முக்கிய பகுதிகள் முடக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் பேச்சுவார்த்தைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
இஸ்ரேல் - லெபனான் மோதல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரங்களில் ஈரான் இறங்கி வராவிட்டால், ஈரானின் எண்ணெய் கிணறுகள் மற்றும் இராணுவ நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகரித்துள்ளது.
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam