குர்திஷ் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் MQ-9 கண்கானிப்பு ட்ரோன்
குர்திஷ் தலைமையிலான சிரிய ஜனநாயகப் படைகளால் அமெரிக்காவின் MQ-9 ரக கண்கானிப்பு ட்ரோன் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டள்ளன.
சிரிய ஜனநாயகப் படைகள் குறித்த ட்ரோன் துருக்கி நாட்டை சேர்ந்தது என கருதியதன் காரணத்தினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த தசாப்தத்தில் வடக்கு சிரியாவானது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், தற்போது அங்கு நிலைகொண்டுள்ள குர்திஷ் படைகளுடன் சமீபத்திய நாட்களில் துருக்கி தரதப்பினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
மில்லியன் டொலர் மதிப்பு
இந்நிலையில், பல மில்லியன் டொலர் மதிப்புள்ள குறித்த ட்ரோன் தற்செயலாக சுட்டு வீழ்த்தப்பட்டமையானது, வடக்கு சிரியாவில் இப்போது நடக்கும் மோதலின் குழப்பமான தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
எனினும் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்ட நேரத்தில் அதன் பணி என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் சிரிய ஜனநாயகப் படைகள் தெரிவித்துள்ளன.
சிரிய ஜனநாயகப் படையை உள்ளடக்கிய ISIS எதிர்ப்பு கூட்டணியின் ஒரு பகுதியாக சுமார் 900 அமெரிக்க இராணுவ வீரர்கள் சிரியாவில் தற்போது உள்ளனர்.
மேலும் பயங்கரவாதக் குழுவை மறுசீரமைப்பதைத் தடுக்க அமெரிக்கா தனது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புவதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
