அதிரடி காட்டும் இஸ்ரேலிய வான்படை! ஒரே நாளில் ஈரானின் 170 முக்கிய இலக்குகள் சிதைப்பு
ஈரானிய பயங்கரவாத ஆட்சியின் இராணுவத் தொழில்துறைகளுக்கு எதிராக மற்றொரு கட்ட வான்வழித் தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய வான்படை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 400 வெடிமருந்துகளைப் பயன்படுத்தி, ஈரானின் 170 முக்கிய இலக்குகளை விமானப்படை தாக்கி அழித்துள்ளது.
ஈரானின் ஆயுத உற்பத்தித் திறனை முடக்கும் நோக்கில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் பின்வரும் இடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
பாரிய இழப்பு
ஆயுத உற்பத்தி மையம்: பல்வேறு வகையான ஆயுதங்களுக்கான முக்கிய பாகங்களைத் தயாரிக்கும் ஈரானின் மத்திய தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டது.
הושלם גל תקיפות נוסף לעבר התעשיות הצבאיות של משטר הטרור האיראני: חיל-האוויר תקף ביממה האחרונה 170 מטרות של המשטר באמצעות כ-400 חימושים.
— Israeli Air Force (@IAFsite) March 30, 2026
במטס התקיפות, חיל-האוויר המשיך להעמיק את הפגיעה בתעשיות ייצור אמצעי הלחימה של המשטר ובהם:
⭕️ אתר מרכזי ששימש לייצור רכיבים משמעותיים למגוון… pic.twitter.com/9iwjnabuIp
ட்ரோன் என்ஜின் ஆலைகள்: ஈரானின் ஆளில்லா விமானங்களுக்கு (UAV) தேவையான என்ஜின்களைத் தயாரிக்கும் தளங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் (R&D): புதிய ரக ஆயுதங்களை உருவாக்குவதற்கும், தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்ட தொழிற்சாலை வளாகங்கள் அழிக்கப்பட்டன.
மேற்கு ஈரானில் தரைமட்டமான கட்டளைத் தளங்கள்: மேற்கு ஈரான் பகுதியில் ஈரானிய பாதுகாப்புப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பல முக்கிய தலைமையகங்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அதிரடி தாக்குதல்கள்
திவந்தாரே (Divandarreh): இங்குள்ள ஈரானின் துணை இராணுவப் படையான 'பசீஜ்' (Basij) அமைப்பின் மத்திய வளாகம் தகர்க்கப்பட்டது.

சாக்வெஸ் (Saqqez): ஈரானின் உள்நாட்டுப் பாதுகாப்புப் படையினரின் (Internal Security Forces) பொலிஸ் நிலையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் ஆயுத விநியோகச் சங்கிலியைப் பெருமளவு பாதித்துள்ளன. குறிப்பாக, ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்திக்கான உள்கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டுள்ளதால், ஈரானின் பதில் தாக்குதல் நடத்தும் வேகம் குறைய வாய்ப்புள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அதே சமயம், அமெரிக்கா ஏற்கனவே 57,000 துருப்புக்களைத் திரட்டியுள்ள நிலையில், இந்த வான்வழித் தாக்குதல்கள் ஒரு பெரிய தரைப்போருக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.