நடுக்கடலில் தீவிரமடையும் பதற்றம்! ஈரானிய நிழற்கப்பற்படையை வழிமறித்த அமெரிக்க உலங்கு வானூர்திகள்
ஈரானிய நிழற் கப்பற்படையை அரபிக்கடலில் வைத்து அமெரிக்க கடற்படை சனிக்கிழமையன்று வழிமறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க மத்திய கட்டளைபீடம் இதனை அறிவித்துள்ளது.
திடீரென நுழைந்த ஆயுததாரி! சரமாரியான துப்பாக்கிச்சூட்டை நடத்திய பாதுகாப்பு படை - டிரம்ப் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
அமெரிக்காவினால் தடை செய்யப்பட்ட கப்பல்
ஈரானின் எரிசக்தி மற்றும் எண்ணெ் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு கடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவினால் தடை செய்யப்பட்ட கப்பலே இவ்வாறு வழிமறிக்கப்பட்டுள்ளது.

செவன் என்ற கப்பல், அமெரிக்கப் பாதுகாப்புடன் ஈரானுக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) கூறியுள்ளது.
USS Pinckney (DDG 91) எனும் அமெரிக்க ஏவுகணை அழிப்புக் கப்பலிலிருந்து புறப்பட்ட உலங்கு வானூர்தியின் மூலம் இந்த இடைமறிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
37வது இடைமறிப்பு
அமெரிக்க கடற்படையின் உத்தரவுக்கு இணங்க கப்பல் தற்போது ஈரானை நோக்கித் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், குறித்த கப்பல் தற்போது உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து வருவதாக CENTCOM தெரிவித்துள்ளது.

"ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளை அமெரிக்கப் படைகள் தொடர்ந்து நடைமுறைபடுத்தி, முற்றுகையை முழுமையாகச் செயல்படுத்தி வருகின்றன என்று CENTCOM அறிக்கையில் கூறியுள்ளது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகை தொடங்கியதிலிருந்து இது 37வது இடைமறிப்பு என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு அறிவித்துள்ளது.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 5 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri