அமெரிக்கா- சீனா வரி விதிப்பு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பர வரி குறைப்பு ஒப்பந்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், அமெரிக்காவும், சீனாவும் 90 நாட்களுக்கு வர்த்தக வரிகளைக் குறைப்பதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசன்ட் அறிவித்துள்ளார்.
மேலும், இரு தரப்பினரும் தங்கள் தீர்வை வரிகளை 115% குறைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரி குறைப்பு
சீன இறக்குமதிகளுக்கு 245% வரை ஒட்டுமொத்தமாக அமெரிக்கா வரிகளை விதித்தது. அதே நேரத்தில் சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 125% வரை வரிகளை விதித்துள்ளது.
மேலும் அரிய வகை கனிமங்கள் உள்ளிட்ட ஏற்றுமதிகளை சீனா நிறுத்தியது. இதனால் இரு தரப்பிலும் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளால் அமெரிக்கா - சீனா பேசுவார்த்தை நடத்த இறங்கியது.
அதன்படி கடந்த 2 நாட்கள் சுவிட்சர்லாந்தில் கலந்துரையாடல் இடம்பெற்றதையடுத்து வரி குறைப்பிற்கு இரு நாடுகளும் இணக்கம் வெளியிட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |