இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு
இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) மற்றும் அமெரிக்க இராணுவம் இணைந்து, ஈரானிய “தீவிரவாத ஆட்சி” மீது விரிவான , சக்திவாய்ந்த கூட்டு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியுள்ளன என இஸ்ரேலின் விமானப்படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்,
இந்நடவடிக்கை, இஸ்ரேல் நாட்டின் நீண்டகால அத்தியாவசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இராணுவ தளங்கள் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன.
இது பரந்த, ஒருங்கிணைந்த, கூட்டு தாக்குதல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அமையிறது.
இஸ்ரேலை அழிக்கும் சதித் திட்டம்
ஈரானிய ஆட்சி, இஸ்ரேலை அழிக்கும் தனது திட்டத்தை கைவிடவில்லை எனவும் கூறப்படுகிறது. “Operation With a Lion” எனப்படும் நடவடிக்கையில் கடுமையான தாக்கத்தை சந்தித்தபோதிலும், அண்மைய மாதங்களில் ஈரான் தனது அணு திட்டங்களை பலப்படுத்தவும், பாதுகாக்கவும், மறைக்கவும் தொடர்ந்து முயற்சித்தது.

அதேவேளை, ஏவுகணை உற்பத்தி செயல்முறையையும் மீண்டும் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேல் நாட்டின் எல்லைப் பகுதிகளுக்கு அருகில் உள்ள தமது பிரதிநிதி குழுக்களுக்கு நிதி, பயிற்சி மற்றும் ஆயுதம் வழங்கியும் வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த செயல்பாடுகள் இஸ்ரேலுக்கு பாரிய அச்சுறுத்தலாகவும், மத்திய கிழக்கு மற்றும் உலக அமைதிக்கும் அச்சுறுத்தலாகவும் உள்ளன.
உள்நாட்டு பாதுகாப்புக் கட்டளை
மக்கள், அவ்வப்போது புதுப்பிக்கப்படும் உள்நாட்டு பாதுகாப்புக் கட்டளை (Home Front Command) வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
דובר צה"ל מודיע כי צה"ל וצבא ארה"ב, פתחו במבצע משותף, רחב ועוצמתי לפגיעה יסודית במשטר הטרור האיראני ולהסרת איומים קיומיים על מדינת ישראל לאורך זמן. המהלומה כללה תקיפה של עשרות מטרות צבאיות ובוצעה כחלק ממתקפה רחבה, מתואמת ומשותפת נגד המשטר.
— Israeli Air Force (@IAFsite) February 28, 2026
המשטר האיראני לא זנח את התוכנית להשמדת… pic.twitter.com/h2Ec34FeXU
பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பது உயிர்களை காப்பதோடு மட்டுமல்லாது, இந்த நடவடிக்கையின் வெற்றிக்கும் முக்கியமானதாகும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்போதும் துல்லியமான உளவுத்தகவல்களின் அடிப்படையில் விமானப்படை ஈரானில் பல்வேறு இடங்களில் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், தேவையானவரை இந்த நடவடிக்கை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan