அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ராஜித கண்டனம்
வெனிசுவேலாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கையை யாராலும் அங்கீகரிக்க முடியாது என்று, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகள் நியாயப்படுத்த முடியாதவை. இது தொடருமானால், எந்த நாடும் விரும்பியபடி மற்றொரு நாட்டை ஆக்கிரமிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அதேவேளை, தற்போதைய நெருக்கடிக்கு வெனிசுவேலாவின் உள்நாட்டு பிரச்சினைகளும் பெருமளவில் காரணமாக உள்ளன என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வெனிசுலா தீவிரமான சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியிருக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். மாறாக , கடுமையான சமூகவாதத்தை பின்பற்றாமல், சமூக ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் சீனா போன்ற நாடுகள் எடுத்த பாதையைப் பின்பற்றியிருக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் சமநிலையான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், நாட்டில் நிலையற்ற தன்மை உருவாகி, வெளிநாட்டு தலையீடுகளுக்கு வாய்ப்பு ஏற்படும் என ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளார்.