சிகையலங்கார நிலையத்திற்கு சென்றவர்களுக்கு சுகாதார பிரிவினரின் அவசர கோரிக்கை
வவுனியா, சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்திற்குச் சென்றவர்களைத் தாமாகவே முன்வந்து பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
வவுனியா, சந்தை உள்வட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தில் பணியாற்றும் மூவர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த சிகையலங்கார நிலையம் தொற்றாளர்கள் அடையாளம் காணும் வரை தொடர்ந்தும் இயங்கி வந்திருந்தது.
இந்நிலையில், குறித்த சிகையலங்கார நிலையத்திற்குப் பலர் சென்று வந்துள்ளனர்.
அவர்களுக்கும் கோவிட் தொற்று ஏற்படக் கூடிய அபாய நிலை உள்ளதால் கடந்த 10 நாட்களுக்குள் குறித்த சிகையலங்கார நிலையத்திற்குச் சென்று வந்தவர்கள் தாமாகவே முன்வந்து சுகாதார திணைக்களத்தில் பி.சி.ஆர் அல்லது அன்டிஜன் பரிசோதனையை மேற்கொண்டு தமது பாதுகாப்பையும், குடும்பத்தினதும், சமூகத்தினதும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரபிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri