ஐ.நாவில் இலங்கை விவகாரம் தொடர்பில் பிரதமர் மோடிக்கு அவசர கடிதம்

on the sri lankan issue at the un
By Independent Writer Mar 11, 2021 03:53 AM GMT
Report

இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஓர் உறுப்பினராக இருப்பதால் “பூச்சிய வரைவு” தீர்மானத்தில் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்குப் பரிந்துரை செய்வதற்கான சகல உரிமைகளையும் கொண்டுள்ளது என தவத்திருவேலன் சுவாமிகள், எஸ். சிவயோகநாதன் மற்றும் வண. பிதா. கந்தையா ஜெகதாஸ் (ஒருங்கிணைப்பாளர்கள்) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் மேற்க்கூடியவாறு தெரிவித்துள்ளனர்.

அக்கடிதத்தில் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவானது உலகின் பிரதான அதிகாரத் தரப்பாகவும் மிகவும் அதிகாரம் மிக்க அயல்நாடாகவும் இருப்பதுடன் இலங்கையிலுள்ள தமிழர்கள் பற்றி மிகச் சிறந்ததொரு புரிந்துணர்வையும் கொண்டிருப்பதால் ஐக்கிய இராச்சியம், கனடா, ஜேர்மனி, மொன்ரினேக்றோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளால் இணைந்து சமர்ப்பிக்கப்பட்ட 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட “பூச்சிய வரைவு”என அழைக்கப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு கோருகின்ற மேன்முறையீட்டின் பொருட்டு இதனை நாம் வரைகிறோம்.

இந்நாடுகள் இத்தீர்மானத்தை வரைந்தபோது பாதிக்கப்பட்டோரைக் கலந்தாலோசிக்கக்கூடவில்லை என்பதுடன் அவை தன்னிச்சையாக வரையப்பட்ட இப் “பூச்சிய வரைவு” தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்க முன்னர் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட இணைந்த மேன்முறையீடுகளையும் புறக்கணித்துள்ளன.

இந்தியா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஓர் உறுப்பினராக இருப்பதால் “பூச்சிய வரைவு” தீர்மானத்தில் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்குப் பரிந்துரை செய்வதற்கான சகல உரிமைகளையும் தாங்கள் கொண்டுள்ளீர்கள்.

பாதிக்கப்பட்டோராகவும் பாதிக்கப்பட்டோரின் பிரதிநிகளாகவும் “பூச்சிய வரைவு” தீர்மானத்தில் இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை உள்ளடக்குவதற்கு உதவுமாறு தங்களிடம் நாம் மேன்முறையீடு செய்கிறோம்.

இப் “பூச்சிய வரைவு” தீர்மானமானது இலங்கைப் பாதுகாப்புப் படையினரால் புரியப்பட்ட தமிழ் மக்களைக் கொத்துக் கொத்தாகக் குன்று குவித்தமை மற்றும் தமிழ்ப்பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கியமை அடங்கலான கொடூரமான குற்றங்களினால் பாதிக்கப்பட்டோரின் அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும் பூர்த்திசெய்யவில்லை.

இந்நிலவரத்தின் தீவிரத் தன்மையின் காரணமாகத் தமிழர்கள் ஒன்றிணைந்து ஒருமாதத்திற்கு முன்னர் 2021ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதியன்று, இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை வலியுறுத்தி கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.

இவ்வழைப்பானது வடக்கு-கிழக்கு சிவில் சமூகத்தினரால் ஒழுங்கமைக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி (P2P) வரை என்றழைக்கப்பட்ட அண்மைய பேரணியில் பங்குபற்றிய பல்லாயிரக் கணக்காகத் தமிழர்களினால் மேலும் வலு சேர்க்கப்பட்டிருந்தது.

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல்விடுதலானது கொடூரமான குற்றங்களைப் புரிந்தோர் நீதியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு வழிகோலுவதுடன் மாத்திரமல்லாது, அது இலங்கையின் அரசியற் தலைவர்களும் பாதுகாப்புப் படைப் பிரதானிகளும் தாம் நீதிக்கு முகங்கொடுக்கத் தேவையில்லை என்பதை நன்கறிந்து கொண்டு, எதுவிதத் தயக்கமும் இல்லாமல் தமிழ் மக்களிற்கு எதிரான சர்வதேசக் குற்றங்களைப் புரிவதற்கான துணிச்சலையும் ஏற்படுத்திவிடும்.

எனவே இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தாமல்விடப்படின் தமிழ் மக்கள் எதிர்கொள்ளவல்ல இந்த அபாயத்தைத் தீவிரமாகக் கவனத்திற்கொள்ளுமாறு நாம் தங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தற்போதைய உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை மாதம் 27ம் திகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், ஐ.நா. மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள் உயர் ஆணையாளர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா. நிபுணர்கள் மற்றும் இலங்கை சம்பந்தமான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வல்லுநர்கள் குழுவின் சகல உறுப்பினர்களும் அடங்கலாக இருபது முன்னாள் ஐ.நா.அதிகாரிகள் “யுத்த விதைகளை விதைத்தல்” எனத் தலைப்பிடப்பட்டு 2021ம் ஆண்டு மாசிமாதம் 18ம் திகதி வழங்கிய தமது அறிக்கையில் இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.“…இலங்கையானது தனது நீதித்துறை நிறுவனங்களை அதனுடைய பாதிப்புற்றோரிற்காகச் செயற்பட முடியாதவையாக ஆக்கியுள்ளது என்பதே கருத்திற் கொளள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

எனவே, சர்வதேச அல்லது வெளிப்புற நியாயாதிக்கத்தினூடாக நீதியை நிலைநாட்டுவதன் பொருட்டு பாதிப்புற்றோருக்கும் அவர்களுடைய பிரதிநிதிகளுக்குமாகப் பணியாற்றுவதற்காக உயர் ஆணையாளரின் பரிந்துரைகளை நாம் மீளவலியுறுத்துகிறோம். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) போன்ற பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச வழிவகைகள் கருத்திற் கொள்ளப்படுதல் வேண்டும்”எனக் குறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களிற்கு எதிராகப் புரியப்பட்டுள்ள சர்வதேசக் குற்றங்களின் சில உதாரணங்கள்

1. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் பொறுப்புக் கூறுதலுக்கான நிபுணர்கள் குழுவினுடைய 2011ம் ஆண்டு பங்குனி மாத அறிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான ஆயுதந் தாங்கிய யுத்தத்தின் இறுதி நிலைகளின் போது போர்க் குற்றங்களும் மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களும் புரியப்பட்டுள்ளதாகவும் 40,000 க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் மரணித்துள்ளதாகவும் நம்பத்தகு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

2. இலங்கை மீதான நடவடிக்கை தொடர்பான ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையின் பிரகாரம் 2009 ம்ஆண்டின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 70,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காணாமல் போயுள்ளனர்.

1.அரசாங்கத்தால் யுத்த சூனிய வலயங்கள் (பாதுகாப்பு வலயங்கள்) எனக் குறித்தொதுக்கப்பட்ட பிரதேசங்களில் இலங்கைப் படையினர் அடுத்தடுத்து குண்டுத் தாக்குதல்களையும் எறிகணை வீச்சுக்களையும் மேற்கொண்ட போது பலர் கொல்லப்பட்டனர். வைத்தியசாலைகள் மற்றும் உணவு விநியோக நிலையங்களின் மீதுகூடக் குண்டுகள் வீசப்பட்டன. பலர் பட்டினியின் காரணமாக இறந்ததுடன் மருத்துவச்சிகிச்சையின்மையால் குருதிப்பெருக்கேற்பட்டும் மரணித்தனர்.

2.2017ம் ஆண்டு மாசி மாதம் உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசக் கருத்திட்டமானது(ஐரீஜேபீ), தமிழ்ப் பெண்கள் பாலியல் அடிமைகளாகக் கையாளப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் நடாத்தப்பட்ட கற்பழிப்பு முகாம்கள் பற்றிய விபரங்களை ஐ.நாவிடம் கையளித்தது.

1.ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொது நலவாய அலுவலகத்தின் 2013சித்திரை மாதத்திற்குரிய அறிக்கைக்கு அமைவாக, இலங்கையில் 90,000 க்கும் மேற்பட்ட யுத்த மூல விதவைகள் உள்ளனர்.

1.குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அடங்கலாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் காணாமற்போயுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஐநாவின் பணிக்குழுவானது உலகில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் இரண்டாவது அதிகூடிய எண்ணிக்கை இலங்கையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சர்வதேசக் குற்றங்களுக்குரிய பொறுப்புக்கூறல் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பொய்யான வாக்குறுதிகளின் வரலாறு அடுத்துவந்த இலங்கை அரசாங்கங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் (UNHCR) தீர்மானங்களை அமுற்படுத்தத் தவறியுள்ளமையையும் தங்களுடைய கவனத்திற்குக்கொண்டுவர நாம் விரும்புகிறோம்.

முன்னைய அரசாங்கமானது அது இணையனுசரணை வழங்கிய தீர்மானத்தை அமுற்படுத்துவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது மாத்திரமல்லாது, முரணாக ஜனாதிபதி,பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களும் தாம் யூஎன்எச்ஆர்சீ தீர்மானத்தை அமுற்படுத்த மாட்டோம் எனத் திரும்பத்திரும்பவும் ஆணித்தரமாகவும் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய புதிய அரசாங்கமானது ஒரு படி கூடுதலாகச் சென்று தீர்மானங்கள் 30/1,34/1 மற்றும் 40/1 களுக்குரிய இணையனுசரணையிலிருந்து விலகியுள்ளதுடன், யூஎன்எச்ஆர்சீ பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்தும் வெளிநடப்புச் செய்துள்ளது.

மேலும், யு.என்.எச்.சி.ஆர் இனை இழிவுபடுத்தும் விதமாக, சிறுவர்கள் அடங்கலாகப் பொதுமக்களைக்கொலை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்த ஒரேயொரு படைச்சிப்பாயும் தற்போதைய ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், போர்க் குற்றங்கள் புரிந்தமைக்காக நம்பத்தகு முறையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பல்வேறு சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்குப் பதவியுயர்வுகள் வழங்கப்பட்டிருப்பதுடன் “யுத்த நாயகர்களாக” ஆகவும் மதிப்பளிக்கப்படுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் யுத்தக்குற்றாவாளியாக சந்தேகிக்கப்படுகின்ற ஓர் உத்தியோகத்தர் நான்கு-நட்சத்திர அதிபதியாக பதவியுயர்த்தப்பட்டுள்ளார். எமது மேன்முறையீட்டைத் தீவிரத்தன்மையுடன் கருத்திற் கொள்வதன் பொருட்டும், இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை “பூச்சிய வரைவு” தீர்மானத்தில் உள்ளடக்குவதன் பொருட்டும் தங்களிற்கு நாம் மேன்முறையீடு செய்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர். 

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US