பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - பிரதி அமைச்சர்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள அதிகரிப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஊடாக வெகுவிரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதிப் தெரிவித்துள்ளார்.
கொட்டகலை பகுதியில் நேற்று(12.07.2025) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், "பெருந்தோட்ட சம்பள விடயம் தொடர்பாக எவ்வளவு காலங்கள் எடுக்குமென்பது குறித்து எம்மால் கூறமுடியாது. இது தொடர்பாக உள்ளக ரீதியாக பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறோம். அரசாங்கம் என்ற ரீதியில் இதற்கான தீர்வு வழங்கப்படும்.
தேர்தல்கள்
கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாகவே ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஆகியவற்றில் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆணையினை வழங்கியிருந்தார்கள் அதன் அடிப்படையில் உள்ளுராட்சி சபை தேர்தலில் பலசபைகளில் தேசிய மக்கள் சக்தி பெருபான்மையினை பெற்றிருந்தது.
இந்த தேர்தலை பொறுத்தவரையில் சிறிய கட்சிகளும் சுயேட்சை கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க முயற்சி செய்தார்கள். நாங்கள் இணையும் நல்ல விடங்களுக்கு எம்மோடு இணைந்து கொள்ளுமாறு தான் நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம். பிரதேசசபையின் ஊடாக மக்களுக்கு சேவையினை செய்யவேண்டும் என்று தான் இனைந்து ஆட்சியமைத்தோமே தவிர எந்த கட்சிகளோடும் ஒப்பந்தம் எதுவும் கிடையாது.
பல அரசியல்வாதிகளும் பல அரச அதிகாரிகளும் சிறைவாசம் அனுபவித்து வருவதாக தற்போது பேசப்பட்டு வருகிறது. மலையகத்தில் இடம்பெற்ற ஊழல்கள் விசாரிக்கப்படுமா என்றும் விமர்சனங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மலையக மக்களுக்காக இதுவரை எதுவும் செய்யப்படவில்லை: இராதாகிருஷ்ணன் எம்.பி
வரி இராஜதந்திரிகள்
ஆகவே, குற்றம் செய்யாதவர்கள் யாராக இருந்தாலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் தண்டனை உண்டு அரசியல் ரீதியாகவோ கட்சிகள் ரீதியாகவோ மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் எதுவும் கிடையாது.
சபைகளில் தலைவர் மற்றும் உபதலைவர்களை தெரிவு செய்ய நடைமுறைகளை மாத்திரமே பின்பற்றினோம். சில விசாரனைகளை மேற்கொள்வதற்கு சில காலங்கள் செல்லும் கல்வி அதிகாரிகள் தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களுக்கு எதிராக கட்டாயம் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அமெரிக்காவினால் இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 44 சதவீதமான வரி இராஜதந்திரிகள் ஊடாக குறைக்கப்பட்டு தற்போது 30வீதமாக காணப்படுகிறது.
இன்னும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு இலங்கை நாட்டுக்கு ஒரு சாதகமான வரி வீதத்தினை கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி அணையா விளக்கு போராட்டம் சொல்லும் செய்தி என்ன..! 22 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
