ரணிலின் கைதினை இராஜதந்திர வழியில் நகர்த்தும் ஐ.தே.க
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்தின் ஈடுபாட்டை எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன.
குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவின் இராஜதந்திர பணிகளின் தலைவர்களுக்கு ஏற்கனவே விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விக்ரமசிங்க இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை காரணமாக அங்கு வருகைத்தரமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரணிலின் கைதுக்கு விளக்கம்
ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன ஆகியோர் அடங்கிய எதிர்க்கட்சிக் விக்ரமசிங்கவின் கைது குறித்து அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியாவின் இராஜதந்திர பணிகளின் தலைவர்களுக்கு ஏற்கனவே விளக்கமளித்துள்ளது.
'அற்பமான குற்றச்சாட்டுகள்' என்று ரணிலின் கைதுக்கு விளக்கம் கூறும் எதிர்க்கட்சிகள் இதனை ஜனநாயகத்தின் விளைவைக் கொண்ட ஒரு நடவடிக்கை என குற்றம் சுமத்தியுள்ளன.
இந்நிலையில் இந்த இராஜதந்திர நகர்வு வெற்றியளிக்குமா அல்லது, குற்றச்சாட்டுக்களின் நிறுபிப்பில் ரணலின் கைது தொடருமா என்பது இன்றைய தீர்ப்பின் பின்னரே தீர்மானிக்கப்படும்
ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை
இந்நிலையில், இந்தியாவின் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஞாயிற்றுக்கிழமை கைது குறித்து கவலை தெரிவித்ததோடு, "பழிவாங்கும் அரசியலை கைவிட்டு" தங்கள் முன்னாள் ஜனாதிபதியை கண்ணியமாக நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
ரணில் விக்ரமசிங்க மீதான குற்றச்சாட்டுகள் "அற்பமானவை" என்று, தரூர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரணிலின் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தார்.
அத்தோடு, இலங்கைக்கான முன்னாள் நோர்வே அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவசரமாக விடுவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தடுப்புக்காவலில் இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து கவலை தெரிவித்தார்.
விக்கிரமசிங்க மீதான குற்றச்சாட்டுகளை "தகுதியற்றது" என்று சொல்ஹெய்ம் நிராகரித்தார். மேலும் உண்மையாக இருந்தாலும் கூட, அவை ஐரோப்பாவில் எந்தவொரு குற்றவியல் அல்லது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கும் சமமாகாது என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



