ஐக்கிய தேசியக் கட்சியை பூதங்களே வழி நடத்துகின்றன– ரவி கருணாநாயக்க
ஐக்கிய தேசியக் கட்சியை (UNP) சில பூதங்கள் இணைந்து வழி நடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஒன்றிரண்டு பூதங்கள் இணைந்து கட்சியை கட்டுப்படுத்துகிறார்கள்.
எனவே, எங்களுக்கு அருகில் செல்ல முடியவில்லை. இருப்பினும், அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பாதையில் செல்ல வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி
அதுமட்டுமல்லாது, எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என்றும் அவர் உறுதி செய்தார்.
மின்சார கட்டணம் அதிகரிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு அதிகாரம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் இதைப் பற்றி நாடாளுமன்றத்தில் முன்பே கேள்வி எழுப்பியிருந்தாலும், சரியான பதில் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் பரிந்துரை செய்தாலும், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி அந்நிய செலாவணி கையிருப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ரணில் விக்கிரமசிங்க பொருளாதாரத்தை மீட்டெடுத்தார், எனவே அவருக்கு அதற்கான பெருமை கிடைக்க வேண்டுமென ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |