ரணிலை சந்தித்த இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏற்பட்டுள்ள நிலை
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கச் சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மனைவியுடன் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.
சில காலமாக சுகவீனமுற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கவின் நலன் அறியவே இவர்கள் அங்கு சென்றுள்ளனர். இளம் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த பயணம் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதானிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த நாடாளுமன்ற உறுப்பினர், ரணில் விக்ரமசிங்கவுடன் பேச தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. நாடாளுமன்றத்திலும் விக்ரமசிங்கவுடன் பேசக் கூடாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் இருந்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயற்சித்து வருவது இரகசியமான விடயமல்ல எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களை தூண்டி விடும் வகையில் செயற்படுவது அனைவரும் அறிந்த உண்மை எனவும் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.