அடையாளம் இல்லாமல் அழிந்து போயுள்ள ஐ.தே.க! சாணக்கியன் கருத்து(Video)
இலங்கையில் முதன்முதல் உருவாக்கப்பட்ட பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி ஒரு அடையாளம் இல்லாமல் அழிந்து போயுள்ளது போலவே ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் அடையாளம் இல்லாமல் போயுள்ளது. ஆனால் தந்தை செல்வா ஒரு தீர்க்கதரிசி உருவாக்கிய தமிழர் கட்சி இன்றுவரை வடக்கு - கிழக்கில் நாடளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துவருகின்ற ஒரு கட்சி என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மேலும், மட்டக்களப்பு தமிழரசு கட்சி வாலிபர் முன்னணி தலைவர் திவாகர் தலைமையில் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125 வது ஜனனதினம் இன்று (31.03.2023) வாவிக்கரையில் உள்ள தந்தை செல்வா பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரையும் தொடர்ந்து வடக்கு கிழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துவருகின்றது. அதற்கான காரணம் கட்சி உருவாக்கப்பட்டபோது அதில் உருவாக்கப்பட்ட கட்சி யாப்பு கட்சி எவ்வாறு இருக்கவேண்டும் என்று அந்த செயற்பாடு காரணமாக வடக்கு கிழக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்கி எடுக்கப்பட்ட செயற்பாடுகள் தான் காரணம்.
எனவே எமது அரசியல் தீர்வை கொண்டுவரும் வரைக்கும் கட்சியின் கொள்கையை மக்களுக்கு எடுத்துரைத்து மக்களை கட்சியின் பாதையில் கொண்டு வரவேண்டும்.
அதேவேளை கட்சியின் மாநாடு நடாத்தப்பட வேண்டிய காலப்பகுதி எப்போதோ முடிந்துவிட்டது. இருந்தும் பல காரணங்களினால் நடாத்தப்படாமல் உள்ளது. எனவே கட்சியின் மாநாடு நடாத்தப்படவேண்டும் இதன் மூலம் இன்னும் எதிர்கால திட்டங்களை தீர்த்து சிறப்பாக செய்யமுடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவு
மத்திய குழு கூட்டத்தில் வட்டார மற்றும் கிளைகள் ஏப்பிரல் மாதத்துக்குள் புனரமைத்து மாநாட்டுக்கு தயார்படவேண்டும் என தீர்மானம் தெரிவிக்கப்பட்டதுடன் இந்த தந்தை செல்வாவின் 125 நினைவு தினத்தில் அவரின் கொள்கைகளை தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லவேண்டும் என்று தெரிவித்தார்.
குறித்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியேந்திரன், ஞா.சிறிநேசன், மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
அங்கு அமைந்துள்ள அன்னாரது உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப்பகுதி
இதேவேளை தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தின நிகழ்வு புதுக்குடியிருப்பு உடையார் கட்டுப்பகுதியில் சிறப்பு நடைபெற்றுள்ளது.
செல்வாவின் 125 வது பிறந்த தின நிகழ்வு புது குடியிருப்பு உடையார் கட்டு வெள்ளப்பள்ளம் பகுதியில் சிறப்பாக அமைக்கப்பட்ட பந்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இணைப்பாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் ஜோன்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி அவர்கள் சிறப்பாக கலந்து கொண்டுள்ளார்.




இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
