டிட்வா அனர்த்தம் : அரசாங்கத்தை குற்றம்சாட்டும் ஐ.தே.க
காலநிலை ஆராய்ச்சி திணைக்களம் முன்கூட்டியே அனர்த்தம் தொடர்பில் அறிவிப்பு விடுத்தும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கமையே பாதிப்பும் மரணங்களும் அதிகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்கோரல இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
முன்கூட்டிய அறிவிப்பு
காலநிலை ஆராய்ச்சி திணைக்களத்தின் அத்தியட்சகர் அத்துல கருணாரத்தின சூறாவளி அனர்த்தம் ஒன்று ஏற்படவுள்ளதாக முன் கூட்டியே அறிவித்துள்ளார்.

அவருக்கு காநிலை மாற்றம் தொடர்பில் அறிவிப்பு மட்டுமே விடுக்க முடியும்.அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கமே எடுக்க வேண்டும்.
நவம்பர் 28ஆம் திகதி மாத்தளை பிரதேசத்தில் 540 மில்லி மீட்டருக்கு மேல் வீழ்ச்சி பதிவானதோடு மத்திய மலைநாட்டில் 400 மில்லி மீட்டரை விஞ்சும் அளவுக்கு மழை பெய்தது.
ஆனால் அரசாங்கம் எந்த காரணத்திற்காக 28 ஆம் திகதி அரச விடுமுறையை அறிவித்தது என்று எமக்கு தெரியாது. இவ்வாறான ஒரு அனர்த்தம் ஏற்படுவதாக அறிவித்தால் ஏனைய அரசு என்றால்,அனைத்து அரச ஊழியர்களின் விடுமுறையும் இரத்துச் செய்யப்பட்டு அவசர நிலைமை பிரகடனப்படுத்தடுவதே நடைமுறையாகும்.
ஆனால் அப்படியொன்றும் உடனடியாக எடுக்கப்படவில்லை.இந்த மரணங்கள் மற்றும் பாரிய அனர்த்தம் யார் செய்த பாவம் என்று எங்களுக்கு சொல்ல முடியாது என்றார்.
வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட் Cineulagam
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri