ஆழ்கடலில் சிக்கிய அரிய வகை மீன்
ஆழ்கடலில் மறைந்திருக்கும் அற்புதங்கள் ஒவ்வொரு நாளும் உலகத்தை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது.
அந்த வகையில் புத்தளம் - நைனாமடு பகுதியில் ஆழ்கடலில் கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிளாலர்களின் வலையில் அரியவகை மீன் இனம் ஒன்று சிக்கியுள்ளது.
அரிய வகை மீன்
இதுபோன்ற அரிய வகை மீனைப் பார்ப்பது இதுவே முதல் முறை எனவும், துறைமுகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் துறைமுக கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வகை மீன் உட்கொள்ள உகந்தவை அல்ல என்பதுடன் இந்த மீன் இனமானது முயல் மீன் (Rhinochimaera atlantica - Broadnose Chimaera) என அழைக்கப்படுகிறது.
மேலும், இது கனடா, கொலம்பியா, பிரான்ஸ், காம்பியா, ஐஸ்லாந்து, மொரிட்டானியா, மெக்சிகோ, நமீபியா, செனகல், தென்னாப்பிரிக்கா, சுரினாம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் காணப்படுவதாக தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த மீன் Longnose chimaeras குடும்பத்தை ஒத்த இனமாகும் மற்றும் மிதமான கடல்களில் 1,500 மீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் வாழ்கின்றது.

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
