திடீரென உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன்: பொலிஸார் விரிவான விசாரணைகள்
வவுனியா பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் கடந்த 31 ஆம் திகதி இரவு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இருப்பினும், மாணவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அனுராதபுரம், ஜெயசிறிபுராவைச் சேர்ந்த 23 வயதுடைய டி.எம்.எஸ். நிர்மல் விக்ரமதாச என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விடுதியில் இருந்த போது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் மரணத்தில் சந்தேகம்
இருப்பினும், மாணவன் உயிரிழக்கும் போது அவரது உடலில் கணிசமான அளவு மது இருந்ததாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மாணவனின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தனது சகோதரனுக்கு மது அருந்தும் பழக்கம் இல்லை எனவும், 31 ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர் விருந்தில் மூத்த மாணவர்கள் தனது சகோதரனை மது அருந்த கட்டாயப்படுத்தியதாகவும் சகோதரர் குற்றம்சாட்டியுள்ளார்.
தனது சகோதரருக்கு வேறு எந்த மருத்துவ பிரச்சினைகளும் இல்லை என்றும், பல்கலைக்கழக பிரச்சினைகள் குறித்து அவர் பல சந்தர்ப்பங்களில் தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தமிழ் சினிமாவில் பிரியங்கா தேஷ்பாண்டே பாடியுள்ள ஒரே ஒரு பாடல், சூப்பர் ஹிட் தான்... என்ன பாடல் தெரியுமா? Cineulagam