முன்னணி பல்கலைக்கழகமாக கொழும்பு பல்கலைக்கழகம் தரவரிசை!
சர்வதேச Webometrics தரவரிசையின் படி கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்டுள்ளது. சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 சிமாகோ (எகிப்து) கூட்டுத்தாபன தரவரிசை சுட்டெண்ணின் படி கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையின் முதல் பல்கலைக்கழகமாக தரப்படுத்தப்பட்டு, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிற பல்கலைக்கழக தரவரிசைகளின் பட்டியலில் கொழும்பு பல்கலைக்கழகமும் முதலிடம் பிடித்துள்ளது.
இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு மையமான கொழும்புப் பல்கலைக்கழகம், ஒன்பது பீடங்கள், ஏழு நிறுவனங்கள், ஏழு மையங்கள், ஒரு வளாகம் மற்றும் கணினி அறிவியல் நிறுவனம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகம் 37,636 இளங்கலை, முதுகலை, டிப்ளோமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.
2022ம் ஆண்டின் தொடக்கத்தில் Webometrics குறியீட்டின் உச்சத்தை எட்டுவது பல்கலைக்கழகத்தின் தரமான ஆராய்ச்சி, கற்பித்தல் செயல்முறையின் சிறப்பம்சம், சர்வதேச அங்கீகாரம், சமூகம், பொருளாதார மற்றும் தொழில்துறை துறைகளுடனான உறவுகளை எடுத்துக்காட்டுகிறது என்று கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
