தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்
அனைத்து பல்கலைக்கழக் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக் கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கூட்டத்தின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுடன் தமது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அதன் இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், "மே 2 ஆம் திகதி தொடங்கிய வேலைநிறுத்தம் இன்னும் தொடர்கிறது.
நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் ராகவன் உடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன, அரசாங்கம் எமக்கான தீர்வுகளை முன்வைத்தது.
ஆனால் நாம் இவற்றை எழுத்துப்பூர்வமாக கோரியுள்ளோம். அந்த சுற்றறிக்கை கிடைத்தவுடன் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரலாம்." என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri